பெயரை மாற்றிக்கொண்ட OPS மகன்..! புதிய பெயர் என்ன..?

4797

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், அதிமுக படுதோல்வி அடைந்தது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், 39-லும் திமுக தான் வெற்றி பெற்றது. வெறும் ஒரு தொகுதியில் மட்டும், ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.

இவர் தான் மக்களவையில், அதிமுக சார்பில் இருக்கும் ஒரே எம்.பி. இந்நிலையில், இவர் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனது முந்தைய பெயர் பி.ரவீந்திரநாத்குமார். 25-08-2020 முதல் அந்தப் பெயரை பி.ரவீந்திரநாத் என மாற்றிக் கொண்டிருக்கிறேன்.

நியூமராலஜி படி இந்த மாற்றத்தை செய்திருக்கிறேன். எனது ஆவணங்களில் பழைய பெயர் இருக்கும். கெசட்டில் மாற்றம் செய்யவில்லை. எனவே மேற்படி இரு பெயர்களும் என்னையே குறிக்கும்” என தெரிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பை பார்த்த நெட்டிசன்கள், யார் கிட்ட என்ன சபதம் போட்டாரோ, இப்படி பெயரை மாற்றிக்கொண்டாரே என்று கூறி வருகின்றனர். மேலும், தனது தந்தையை முதல்வர் ஆக்குவதற்காக இந்த செண்டிமெண்ட் மாற்றமா? இல்லை தனக்கு மத்திய அமைச்சர் பதவி பெறவா? என அரசியல் வட்டாரங்களில் இதை விவாதம் ஆக்குகிறார்கள்.