வீடுகட்ட காத்திருப்பவர்களா நீங்கள்..? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!

1344

சட்டப்பேரவையில், சோழவந்தான் தொகுதி திமுக MLA மாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் மக்கள் 300 சதுரடி பரப்பளவில் வீடு கட்டிக்கொள்ள, குடிசை மாற்று வாரியத்தின் மூலம், 2.10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என கூறினார்.

இந்நிலையில், வாடிப்பட்டியில் 380 வீடுகளும், அலங்காநல்லூரில் 619 வீடுகளும் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதற்கு 3 கோடியே 88 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

Advertisement