அ.தி.மு.கவிற்கு திருஷ்டி கழிக்கவே மக்கள் எங்களை தோற்கடித்துள்ளனர் – ஓ.பி.எஸ்!

379

தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள், ஜூலை 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து புது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-

“சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியமைத்த சாதனையை அ.தி.மு.க படைத்தது.

அதேபோல, உள்ளாட்சித் தேர்தல், கூட்டுறவுத்தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான இடங்களில் அ.தி.மு.க வெற்றி பெற்றது.

தொடர்ந்து, 2011 முதல் பல்வேறு வெற்றிகளைக் குவித்த அ.தி.மு.கவிற்கு திருஷ்டி கழிக்கும் வகையில் 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவை மக்கள் வழங்கியுள்ளளனர்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of