டுவிட்டர திறந்ததும்.., ஓபிஎஸ் போட்ட “நச்” டுவீட்..,!

806

உலகம் முழுவதும் ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று நண்பர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இன்று அனைவரும் அவர்களது நண்பர்களுக்கு, நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் அவரது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் செய்துள்ளார்.

அதில்,

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

எனும் வள்ளுவர் கூற்றின்படி, எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் உற்ற காலங்களில் உடனிருந்து உதவும் உறவாகிய நட்பினை சிறப்பிக்கும் இத்தினத்தில்,

அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மனம் மகிழ்கிறேன்.”

என கூறியுள்ளார்.

ஒ.பன்னீர்செல்வம் மட்டுமல்ல பல்வேறு அரசியல்கட்சி தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of