‘ஒரு அடார் லவ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

174

ஒரே பாடல் அதிலும் ஒரு கண்ணை சிமிட்டும் காட்சியின் மூலம் உச்ச நட்சத்திரங்களுக்கு நிகராக பேசப்பட்ட பிரியா வாரியர். அவர் நடிக்கும் ஒரு அடார் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படத்தில் வரும் ஒரு பாடலின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இப்பாடல் வெளியான சமயத்தில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்தோ அந்த அளவிற்கு எதிர்ப்பையும் சந்தித்தினர்.

இந்நிலையில், ஒரு அடார் லவ் படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி அதாவது உலக முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்படும் அன்று வெளியிடப்பட உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

இதனால் புரொமோஷன் வேலைகளும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.