“மாட்டிக்கிட்டியே குமாரு..” குட்டி கதை பாடலால் தர்ம சங்கடத்தில் அனிருத்..!

525

ஏறும் அனைத்து மேடைகளிலும் குட்டி கதை சொல்லும் விஜய், தற்போது அதை பாடலாகவே பாடிவிட்டார். விஜய் சொல்லும் கதை தான் எங்கயோ கேட்டது போல் உள்ளதென்றால், அவர் பாடிய பாடலும் எங்கேயே கேட்டது போல் தான் உள்ளது.

அப்படி எந்த இடத்தில் தான் இந்த பாடலை கோட்டோம் என்று ஏழாம் அறிவை கொண்டு தேடிய நெட்டிசன்கள், நொடி பொழுதில் கண்டறிந்தனர் அது பழைய பாடலின் மெட்டு என்று.

“செல்போன் வைத்திருந்தால் தான் உடைக்கற என்று பாத்தா.. லேன்ட் லைன் வச்சிருந்தாளும் உடைக்கிறியே டா..” என சந்தானம் கூறுவதைப்போன்று, “ஆங்கில படத்தில் இருந்து திருடினால் தான் கண்டுபிடிக்கிறீங்கனா.. பழைய தமிழ் திரைப்படத்தில் இருந்து திருடினாலும் கண்டுபிடிக்கிறீங்களே” என்று அனிருத் கதறுவதைப்போன்றும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு தாக்குகின்றனர்.

எந்த விதமான மீம்ஸ்களை போட்டு தாக்கினாலும், விஜய் ரசிகர்கள் என்ற புல்லட் புரூஃப் கொண்டு, அந்த பாடல் 1 மில்லியன் லைக்குகள், டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் என பல்வேறு சாதனைகளை புரிந்துக்கொண்டு வருகிறது.

ஆனாலும், ஒரு நல்ல இசையமைப்பாளராக அறிமுகமாகிய அனிருத்துக்கு, இது அழகல்ல என்றும், இனிமேலாவது சொந்த மெட்டுக்களையும், சுவையான பாடல்களையும் தருமாறு இசை ஆர்வலர்கள் அனிருத்திடம் கேட்டு வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of