“ஒத்த செருப்பு” ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட விஜய் சேதுபதி.

1006
othaseruppu11.3.19

பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்துவரும் படத்துக்கு ‘ஒத்த செருப்பு’ எனப் பெயரிட்டுள்ளார்.

எப்போதுமே வித்தியாசமான கதைக்களங்களை இயக்குபவர் பார்த்திபன். 2016-ம் ஆண்டு ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்ற படத்தை இயக்கினார். இதில் பார்த்திபன், சாந்தனு, பார்வதி நாயர் உள்ளிட்டோர் நடித்தனர். இப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்த பார்த்திபன், தற்போது மீண்டும் படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். ‘ஒத்த செருப்பு’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தைத் தயாரித்து, இயக்கி, நடிக்கவும் உள்ளார்.othaseruppuuu11.3.19

இதன் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் விஜய் சேதுபதி. இப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இந்த வீடியோ பதிவின் மூலம் இக்கதை த்ரில்லர் வகையைச் சார்ந்ததாக இருக்கும் எனத் தெரிகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of