‘ஒத்தசெருப்பு’ – நவாஸுதீன் சித்திக்கை ‘வச்சு செய்ய’ உள்ளேன்

283

கடந்த சில காலமாக தமிழ் சினிமாவில் வித்யாசமான கதைக்களம் மட்டும் இன்றி தொழில்நுட்ப ரீதியாகவும் மாறுபட்டு காணப்படும் படங்கள் வெளியாகி வருகின்றன. அண்மையில் இயக்குனர் பார்த்திபன் அவர்கள் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்து, விநியோகம் செய்து வெளியான திரைப்படம் தான் ஒத்தசெருப்பு, மக்கள் மத்தியிலும் பிற இயக்குனர்கள் மத்தியிலும் மிக பெரிய வரவேற்பினை இந்த திரைப்படம் பெற்றது.

இந்த திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சி மேடையில் பேசியபோது, நான் வெறும் கமெர்ஷியல் இயக்குனர் ஆனால் பார்த்திபன் நீங்க வேற மாதிரி என்று கூறினார். மேலும் இந்த படத்தை பார்த்துவிட்டு நேராக பார்த்திபன் வீட்டுக்கு சென்றேன் அங்கு அவரை பாராட்டிவிட்டு அவர் காலில் விழுந்தேன் என்று பார்த்திபனை புகழ்ந்தார் அவர்.

Navasudeen

இந்நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் எடுக்க முடிவு செய்துள்ளார் பார்த்திபன் என்ற புதிய தகவலை அவரே தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதுவும் ஹிந்தியில் பார்த்திபன் கதாபாத்திரத்தின் பேட்ட வில்லன் நவாஸுதீன் சித்திக்கை ‘வச்சு செய்ய’ உள்ளேன் என்று தனது பாணியில் பதிவும் செய்துள்ளார்.

Navasudeen-sithiq

அந்த பதிவில் “Os7-ஐ ஹிந்தியில் நவாஸுதீன் சித்திக்கை ‘வச்சி செய்ய’ இருக்குறோம். அதற்கான பேச்சு வார்த்தையின் போது….தயாரிப்பாளர்களில் ஒருவரான ரமேஷ் உடன்” என்று குறிப்பிட்டு இருந்தார்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of