OTT-ல் ரிலீசாகுமா மாஸ்டர்..? பெரிய மீனை வைத்து தூண்டில் போடும் நிறுவனங்கள்..!

535

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக இணையும் திரைப்படம் மாஸ்டர். ஏற்கனவே, மாநகரம், கைதி ஆகிய இரண்டு வெற்றிப்படங்களை லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ளதாலும், விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பதாலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இதுமட்டுமின்றி, பாடல்களும் பட்டைய கிளப்பியுள்ளதால், படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால், வைரஸ் தெற்றால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, சூரறைப்போற்று படத்தை ஒடிடியில் வெளியிட இருப்பதாக சூர்யா வெளியிட்டதில் இருந்து, மாஸ்டரும் அப்படி வெளியாகிவிடுமோ என்று ரசிகர்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

காரணம், விஜயின் மாஸ் காட்சியையும், விஜய்சேதுபதியின் வில்லத்தனத்தையும் பெரிய திரையில் காணவே பலரும் ஆவலாக இருக்கின்றனர். இந்நிலையில், விஜயின் படத்தை 70 கோடியில் இருந்து 100-கோடி ரூபாய் வரை வாங்கிக்கொள்வதற்கு பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயின் திரைப்படம் சாதாரணமாகவே 100 கோடி ரூபாய் வசூல் செய்துவிடும் என்றாலும், வைரஸ் தொற்று காலத்தில் தியேட்டர்களில் கூட்டம் குறைவாக வர வாய்ப்பு இருக்கிறது.

இதன்காரணமாக, வசூல் பாதிக்கும் வாய்ப்பு உள்ளதால், படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதுவரை படத்தின் ஒடிடி ரிலீஸ் பற்றி படக்குழு எதுவும் தெரிவிக்கவில்லை என்பது விஜய் மற்றும் விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு நிம்மதியான செய்தியாக இருக்கிறது.

Advertisement