“எங்கள் அணி அபாயகரமான அணி” – அப்சர் சசாய் | Afsar Zazi | Wicket Keeper

404

அண்மையில் நடந்த வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி டெஸ்ட் போட்டியில் தாங்கள் சிறப்பாக விளையாட உத்வேகமாக இருக்கும் என ஆப்கானிஸ்தான் வீரர்கள் நம்புகிறார்கள்.

இந்நிலையில் ஆசிய கண்ட சீதோஷ்ண நிலையில் நாங்கள் அபாயகரமான அணி என்று ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் அப்சர் சசாய் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அப்சர், எங்களது வீரர்கள் சிறந்த திறமை படைத்தவர்களாக உள்ளோம். உள்ளூர் லெவலில் முதல் தர போட்டிகளில் விளையாடி வருகிறோம். எங்கள் மண்ணில் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதனால் எங்களுடைய எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது என்று அவர் கூறினார்.