நமது ஓட்டு விற்பனைக்கு அல்ல..! – சுவரொட்டி மூலம் விழிப்புணர்வு

288

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கி கிராமமக்கள் பணத்திற்க்காக தங்கள் வாக்கை விற்கக் கூடாது என முடிவு செய்துள்ளனர்.

மறமடக்கி கிராமத்தில் ஆயிரத்து 200க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு உள்ளாட்சி தேர்தல் வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும், அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தங்கள் வாக்குகளை விற்கக் கூடாது என முடிவு செய்துள்ள கிராம மக்கள், இதுதொடர்பாக கிராமம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். மேலும் தங்கள் பகுதிக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து தருபவர்களை கண்டறிந்து நேர்மையான முறையில் வாக்களிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of