வெளியே சுற்றியவர்கள் – வசூலிக்கப்பட்ட அபராதம் இத்தனை கோடியா?

790

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக, 2 லட்சத்து 14 ஆயிரத்து 951 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

தடை உத்தரவை மீறியதாக, 2 லட்சத்து 28 ஆயிரத்து 823 கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், அபராதமாக ஒரு கோடியே 6 லட்சத்து 74 ஆயிரத்து 294 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தேவையின்றி வெளியே சுற்றியதாக ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறை அறிவித்துள்ளது.