ஓன் போர்ட் கார் ஆப் – சட்டப்படி குற்றம்

1139

வெளியூர் செல்லும் பயணிகள் ஓன் போர்ட் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பங்களிப்பு மூலம் பயணம் செய்யும் வகையில் புதிய செல்போன் செயலி அறிமுகமாகியுள்ளது.

சொந்த பயன்பாட்டுக்கு வாங்கப்பட்ட கார்களில் பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சொந்த பயன்பாட்டுக்கு கார் வாங்கியுள்ள உரிமையாளர்கள், எங்கு செல்கிறார்கள் என்பதை செயலியில் பதிவிடுகின்றனர்.

அதே பகுதிக்கு செல்லும் வாடிக்கையார்களுக்கு, செயலி மூலம் இந்த விவரம் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அவர்கள் ஷாரிங்க் மூலம் வாகனத்தில் ஏற்றப்பட்டு, அவர்களிடம் கணிசமான தொகை பெறப்படுகிறது. ஆனால் சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய கார்களை வாடகைக்கு விடுவதும், பயணிகளை ஏற்றுவதும் சட்டப்படி குற்றமாகும்.

இது தெரியாமல் பல கார் உரிமையாளர்கள், தங்கள் கார்களில் பயணிகளை ஏற்றி அவர்களிடம் பணம் பெற்று வருகின்றனர். சென்னையில் இந்த கலாச்சாரம் தற்போது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று ஓன் போர்ட் காரில் பயணிகளை ஏற்றி சென்ற காரை பூவிருந்தவல்லி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மதுரவாயலில் இரண்டு பயணிகளை ஏற்றிக் கொண்டு பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த காரை, பூவிருந்தவல்லி சோதனைச் சாவடி அருகே அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.

மதுரவாயல் இருந்து பெங்களூர் வரை செல்வற்காக, காரில் ஏறிய இருவரிடமும் தலா 700 ரூபாய் கட்டணம் வசூலித்தது விசாரணையில் தெரிய வந்தது. பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், வாகன கட்டணங்கள் உயர்வு போன்ற காரணங்களால் மக்கள் இதுபோன்ற சேவைகளை பயன்படுத்தி வருவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement