டெல்லியில் காற்று மாசு..! கூறுபோட்டு விற்கப்படும் காற்று..! அதுவும் விதவிதமான ப்ளேவர்களில்..!

682

டெல்லியில் காற்று மிகவும் மோசமாக மாசடைந்துள்ளதால், அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இந்த பாதிப்பை தொடர்ந்து, அரசு பல்வேறு வழிக்காட்டுதல்களை மக்களுக்கு அளித்து வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் ஆக்சி புயூர் என்ற பிராணவாயு அளிக்கும் மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், ஆக்ஸிஜன் காற்று விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் ஆரஞ்சு, எலுமிச்சை, யூகலிப்டஸ், இலவங்கப்பட்டை என்ற விதவிதமான பிலேவர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சுவாசிக்கும் நிமிடங்களுக்கு ஏற்ப, அந்த மையத்தில் இருந்து கட்டனம் வசூலிக்கப்படுகிறது. தண்ணீரை காசு கொடுத்து வாங்கிய நிலையில், தற்போது காற்றும் மாசடைந்து, காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மையம் தொடங்கப்பட்டதை வைத்து பார்க்கும் போது, இன்னும் எத்தகைய மாற்றங்கள் உலகில் நடைபெறும் என்று அச்சத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of