இரத்தத்தில் oxygen அளவை கண்டறியும் APPLE Watch

506

இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை கண்டறியும் வசதியுடன், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதங்களில், தங்களின் புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி ஆப்பிள் நிறுவனம் Ipad Air மற்றும் புதிய வாட்ச் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6-ல் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை கண்டறியும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது சிலநொடிகளில் இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவுகளை கணக்கிட்டு தெரிவிக்கும் திறன் கொண்டுள்ளது. இது முந்தைய பிராசஸரை விட வேகமாக இருப்பதுடன் பல்வேறு அதிநவீன அம்சங்களை கொண்டுள்ளது.

புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6-ன் விலை 399 டாலர் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை 40 ஆயிரத்து 900- ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவீன வசதிகளுடன் கூடிய Ipad Air-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இது  முந்தைய பிராசஸரை விட 40 சதவீதம் சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை வாடிக்கையாளர்களுக்கு 399 டாலர்கள் என்றும், மாணவர்களுக்கு 299 டாலர்கள் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement