ப.சிதம்பரத்திற்கு மீண்டும் விழுந்த இடி.. நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு வாதம்..!

497

ஐஎன் எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மனுவை மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

ப.சிதம்பரம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி ஐ என் எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 25 நாட்களாக சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து வாதிட்ட சிபிஐ தரப்பு ஜாமீன் வழங்கினால் ஐ என் எக்ஸ் மீடியா ஊழல் தொடர்பான சாட்சியங்களை கலைக்க ப.சிதம்பரம் முயற்சி செய்யலாம் என கூறியது. இதனை விசாரித்த நீதிபதி, ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ப.சிதம்பரத்திற்கு மீண்டும் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் ப.சிதம்பரம் வெளியில் வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of