ப.சிதம்பரம் வழக்கு : காவலா? விடுதலையா.? – இன்னும் சற்று நேரத்தில் உத்தரவு…!

340

ப.சிதம்பரம் வழக்கில் இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கவுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ப.சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்து நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ப.சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது சிபிஐ ப.சிதம்பரத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதற்கு பதிலளித்த ப.சிதம்பரமும் தன் பக்க நியாயத்தை தெரிவித்தார்.   

இந்த நிலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கின் உத்தரவை அரை மணி நேரத்திற்கு ஒத்திவைத்தார். இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் இந்த வழக்கில் முக்கிய உத்தரவை பிறப்பிக்கவுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of