முதலில் குற்றவாளி என தீர்ப்பு, பிறகு தான் விசாரணை.., ப. சிதம்பரம்

564

இன்னும் சில நாட்களில் நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்காளர்களை தன்வசமாக்க தொடர்ந்து பல்வேறு வாக்குறுதிகளை மழைப்போலா அள்ளி வீசி வருகின்றனர்.

இதில் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் தொடர்ந்து கூறி வருவதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. அவ்வகையில் நேற்று கோவையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, முன்னாள் நிதி மந்திரி ப. சிதம்பரத்தை கடுமையாக சாடினார்.

மறுவாக்கு எண்ணிக்கை மந்திரி ப.சிதம்பரம், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும், அவர்கள் தங்கள் சொந்த இருப்புக்காக ஜாமீன் பெறுவது முக்கியம் என்றும் மோடி விமர்சித்தார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி இவ்வாறு கூறியிருந்தார்.

இதற்கு ப.சிதம்பரம் இன்று பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மோடி ஆட்சியில் குற்றம்சாட்டப்பட்டவரை குற்றவாளி என முதலில் தீர்ப்பு வழங்கப்பட்டு, அதன் பிறகு தான் விசாரணை நடத்தப்படும்” என குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of