திகார் சிறைக்கு செல்கிறார் ப.சிதம்பரம்..!

551

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ப.சிதம்பரம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாக கூறி அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.

இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 19-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of