70 ஆண்டு அரசியல் சாசனத்தை 72 மணி நேரத்தில் பாஜக புதைத்துள்ளது – ப.சி

1309

அரசியலமைப்பின் பாதுகாப்புக்கான மன்றம் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற கருத்தரங்களில், ப.சிதம்பரம் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டம் பற்றிய உண்மையை மறைக்கிறார்கள் அல்லது திரித்து சொல்கிறார்கள் என்று கூறினார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம், இந்திய மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான போராட்டம் என குறிப்பிட்ட அவர், இந்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என பொய்யான தகவலை சொல்லி வருவதாக குற்றம்சாட்டினார்.

இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே, இந்த சட்டம் குறித்து பேசுவுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்ட அவர், 70 ஆண்டு அரசியல் சாசனத்தை வெறும் 72 மணி நேரத்தில் பாஜக அரசு குழித்தோண்டி புதைத்து விட்டதாக கடுமையாக சாடினார்.

ஒருவரை நேரடியாக அந்நியர் என்று சொல்ல முடியவில்லை என்பதால், தாய், தந்தை மூலம் அந்நியர் என சொல்ல வைக்க கூடிய முயற்சி தான்  என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of