சிறையில் இருந்து கொண்டும் விளாசிய ப.சி..! மத்திய அரசிடம் கேட்ட நறுக் கேள்வி..!

418

காங்கிரஸின் மூத்த தலைவர்களில் முக்கியமான ஒருவர் ப.சிதம்பரம். இவர் பல முறை மத்தய அமைச்சராக பதவி வகித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், தற்போது திகார் சிறையில் இருந்து வருகிறார்.

எப்போதும் மத்திய அரசை விமர்சனம் செய்து வரும் ப.சிதம்பரம், சிறையில் இருந்த போதும் விமர்சனம் செய்யத் துவங்கிவிட்டார். ஆம், அவரது டுவிட்டர் கணக்கில் இருந்து, அவர் சார்பில் அவரது குடும்பத்தினர் டுவீட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றும் அவரது கணக்கில் இருந்து ஒரு டுவீட் போடப்பட்டுள்ளது. அதில்,

“இந்திய பொருளாதார சரிவால் ஏழைகள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறைவான வேலைவாய்ப்பு, குறைவான ஊதியம், குறைந்த முதலீடு, வர்த்தகம் குறைவால் ஏழைகளும், நடுத்தர மக்களும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சரிவில் இருந்து நாட்டை மீட்பதற்கான திட்டம் எங்கே?” என கேட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of