பேசினாலே குற்றமா? – நெல்லை கண்ணன் கைதில் ப.சிதம்பரத்தின் அதிரடி கேள்விகள்..!

655

பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுகின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ் அறிஞர், நெல்லை கண்ணன் கைதுக்கு எதிராக இவ்வாறு ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பற்றி ஒருமையிலும், சர்ச்சைக்குரிய வகையிலும், மேலப்பாளையம் பொதுக் கூட்டத்தில் நெல்லை கண்ணன் பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நெல்லை கண்ணனை கைது செய்ய, பாஜகவினர் தீவிர போராட்டங்கள் நடத்தினர். கடந்த 1ம் தேதி இரவு பெரம்பலூரிலுள்ள விடுதியில் அவர் கைது செய்யப்பட்டார். மதுரையிலிருந்து, சிகிச்சைக்காக சென்னை சென்ற வழியில், அவர் பெரம்பலூரில் தங்கியிருந்தபோது, போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் 13ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்வீட்டுகளை பாருங்கள்:

பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுகின்றன. பேசுவதே குற்றம் என்று வைத்துக்கொண்டாலும், அதற்கு ஏன் 14 நாள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டும்?

இப்படி நினைப்பவர்களை லண்டன் மாநகர் ஹைட் பார்க் (Hyde Park) என்ற பூங்காவிற்கு அனுப்ப வேண்டும். அங்கே பேசப்படுவதை அவர்கள் கேட்க வேண்டும். பேச்சும் செயலும் இணைந்தால் தான் குற்றம். நெல்லை கண்ணன் பேசினார் என்று வைத்துக்கொள்வோம், என்ன தீய செயலை அவர் செய்தார்?