CAA – எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்த அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்த ப.சி

1100

குடியுரிமை சட்ட திருந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்த அமித்ஷாவுக்கு, ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், அமித்ஷா எதிர்கட்சிகள் தன்னுடன் குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி விவாதம் நடத்த தயாரா என சவால் விடுத்துள்ளதை குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தான் கடந்த டிசம்பர் 12-ம் தேதி முதல் எதிர்கட்சிகள், மாணவர்கள், சட்ட வல்லுநர்கள் வலியுறுத்தி வருவதாக பதிவிட்டுள்ள அவர் முன்பே தான் கூறியது போல் குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக 5 விமர்சகர்ளுடன் விவாதம் நடத்த பிரதமர் மோடி தயாரா எனவும், விவாதத்தை மக்கள் நேரலையில் பார்த்து முடிவு எடுக்கட்டும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.