ப.சிதம்பரம், தினமும் தனது குடும்பத்தினரை 30 நிமிடங்கள் சந்திக்கலாம்

404

.சிதம்பரம், தினமும் தனது குடும்பத்தினரை 30 நிமிடங்கள் சந்திக்கலாம்

சி.பி.ஐ காவலுக்கு சென்றுள்ள ப.சிதம்பரம் தினமும் தனது குடும்பத்தினரை 30 நிமிடங்கள் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி சி.பி.ஐ நீதிபதி அஜய்குமார், இந்த அனுமதியை அளித்துள்ளார்.

இதேபோன்று, ப.சிதம்பரம், வரும் 26ஆம் தேதி வரை, ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் தனது வழக்கறிஞரை சந்திக்கவும் அனுமதி வழங்கப்படுவதாகவும் நீதிபதி அஜய்குமார் அறிவித்தார்.

மேலும் ப.சிதம்பரத்தின் மாண்பை குறைக்கும் வகையில் சி.பி.ஐ நடந்து கொள்ளக்கூடாது என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

ப.சிதம்பரத்துக்கு தேவையான உடைகளை வெளியில் இருந்து எடுத்துவர அனுமதி வழங்கிய நீதிபதி, 48 மணி நேரத்திற்கு ஒரு முறை ப.சிதம்பரத்திற்கு மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார்.