ப.சிதம்பரத்திற்கு மெடிக்கல் செக் அப்..! சிபிஐ வைத்த செக்..? காரணம் இதுதானா..?

1073

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக நேற்று ப.சிதம்பரம் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இன்று அவர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக ப.சிதம்பரத்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

எப்போதும் கைது செய்யப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனை செய்வது சிபிஐயின் வழக்கம் ஆகும். அந்த வகையில் ப.சிதம்பரத்திற்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. முதல் காரணம், பெரும்பாலும் முக்கிய புள்ளிகள் கைது செய்யப்படும்போது உடல்நிலையை காரணம் காட்டி பெயில் பெறுவதற்கு முயற்சி செய்வார்கள், முன்னதாகவே பரிசோதனை செய்து விட்டால், பெயில் பெறுவதை தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது.

இரண்டாவது காரணம், ப. சிதம்பரம் மிக முக்கியமான அரசியல் தலைவர். அதேபோல் அவரது வயது காரணமாக உடலில் சில பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

இதனால் பாதுகாப்பு கருதி அவரது உடலில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவ சோதனைக்கான ரிப்போர்ட் நாளை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of