ப.சிதம்பரத்திற்கு 3-வது முறையாக இடி..! நீதிபதி வைத்த வெடி..!

1072

ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவல், வரும் திங்கட்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காவலை மூன்றாவது முறையாக நீட்டித்து சிபிஐ நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவல் இன்றோடு நிறைவடைந்தது.

அதனையடுத்து, ப.சிதம்பரம் இன்று பிற்பகலில் ரோஸ் அவென்யூ சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சி.பி.ஐ. தரப்பு வாதத்தையும், ப.சிதம்பரம் தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலை வரும் திங்கட்கிழமை வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

ப.சிதம்பரத்துக்கு மூன்றாவது முறையாக சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

Advertisement