ப.சிதம்பரம் அதிரடியாக கைது..!

253

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அதிரடியாக நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சி.பி.ஐ உத்தரவிட்டிருந்தது. ஆனால் ப.சிதம்பரம் முன் ஜாமீன் கோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து ப.சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து நீண்ட இழுபறிக்கு பின் வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதனிடையே ப.சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டது. மேலும் ப.சிதம்பரத்தின் வீட்டில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ அதிகாரிகள் நோட்டிஸ் ஒட்டி இருந்தனர். இது போன்ற பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், நேற்றிரவு இரவு 8 மணிக்கு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.

அவர் தலைமறைவாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், 27 மணி நேரத்திற்கு பின் ப,சிதம்பரம் இருக்கும் இடம் தெரிந்தது. இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் காங்கிரஸ் அலுவலகத்திற்கு விரைந்தனர். அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் அதிகாரிகளை வழிமறித்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இதனிடையே ஜோர் பாக் என்ற பகுதியில் உள்ள வீட்டிற்கு ப.சிதம்பரம் சென்றதை அறிந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு குவிந்தனர். வீட்டின் கேட் பூட்டப்பட்டிருந்ததால் சிபிஐ அதிகாரிகள் சுவர் மீது ஏறி குறித்து அதிரடியாக உள்ளே நுழைந்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of