2-வது குழந்தை பிறந்தது – இயக்குநர் பா.ரஞ்சித் உற்சாகம்

765

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித். அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய இவர், மெட்ராஸ், காலா, கபாலி உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

நீலம் புரெடக்ஷன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வரும் இவர், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித்-அனிதா தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு மிளிரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of