“ராஜராஜ சோழனை விட மாட்டீங்க போல!” மீண்டும் பா.ரஞ்சித் சொன்ன கருத்து!

1084

தன்னுடைய பேச்சு மற்றவர்களை கோபப்படுத்தினால் தவறு தன் மீது இல்லை என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், ராஜராஜ சோழன் உயிருடன் இருந்திருந்தால் தனது விமர்சனத்தை ஏற்று உரையாட வந்திருப்பார் என்று கூறினார்.

தான் பேசியதை ஒரு இடத்திலும் மறுக்கவில்லை என்றும், தனது பேச்சினால் தமக்கு எந்தவித மன உலைச்சலும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார். தனது பேச்சு பிறரை கோபப்படுத்தினால் தவறு தன் மீது இல்லை என்றும், எதிர்ப்பவர்களிடம் தான் உள்ளதாகவும் கூறினார்.

ராஜராஜ சோழன் குறித்து தான் பேசியது உண்மைதான் என்றும், அதற்கான விளைவுகளை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.