மீண்டும் ராஜராஜ சோழனை வம்பிழுக்கும் ரஞ்சித்! ஆனால் இந்த முறை ஒரு டுவிஸ்ட்!

1140

இயக்குநர் பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து அவதூறு பரப்பியதாக கூறி, பல்வேறு தரப்பினர் இவருக்கு எதிராக விமர்சனம் செய்தனர். மேலும், அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“எனது குழந்தை பருவம் முதல் நான் சந்தித்த சாதிய ஒடுக்குமுறையை என்னுடைய எழுத்துகள் மூலம் பதிவு செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. உதாரணமாக என்னுடைய கிராமத்திலிருந்த மரம், கிணறு அல்லது விளையாட்டு திடல் ஆகிய அனைத்தும் மற்றவர்களுக்கு சந்தோஷமாக இருந்தது.

ஆனால் எனக்கு இவ்வற்றை பார்த்தால், இவை எனக்கு சொந்தமானவை இல்லை என்றே சமூகம் கூறுவதே ஞாபகத்திற்கு வரும். எல்லோரும் உபயோகப்படுத்தும் பொருட்களை, பட்டியலினத்தவர் என்ற ஒரே காரணத்தால் எனக்கு ஏன் அனுமதி கொடுக்கப்படவில்லை என்ற எண்ணம் எனக்கு அதிகமாக இருந்தது.

எனவே இவற்றை எனது படைப்புகளின் மூலம் சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.
மேலும் எனது பள்ளி பருவத்தில் எனக்கு தண்ணீர் கொடுத்த விதம் முதல் கடைகளில் எனக்கு சில்லறை திரும்பி கொடுப்பது வரை பல சமயங்களில் சாதிய கொடுமைகளை நான் உணர்ந்துள்ளேன்.

இந்தச் சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்தவை. அதே நிலை இன்னும் சில இடங்களில் தொடர்வதுதான் மிகவும் வருத்தமாகவுள்ளது.
ராஜராஜ சோழன் குறித்து நான் கூறியது அனைத்தும் கே.கே.பிள்ளை, கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, பொ.வேலுசாமி மற்றும் நொபோரு கராஷிமா ஆகியவர்களின் புத்தகங்களிலிருந்து படித்தது.

அத்துடன் ராஜராஜ சோழன் காலத்தில்தான் ஒவ்வொரு சாதிக்கு என்று தனியாக இடுகாடுகள் இருந்தது. இந்த முறை முந்தைய மன்னர்கள் காலத்தில் துவங்கினாலும், ராஜராஜ சோழன் காலத்தில்தான் இந்த முறை பெரிதும் கடைபிடிக்கப்பட்டது.”

இவ்வாறு அவர் கூறினார்.

இதுவரை தன்னுடைய கருத்தை தான் பா.ரஞ்சித் சொல்கிறார் என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், கே.கே.பிள்ளை, கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, பொ.வேலுசாமி மற்றும் நொபோரு கராஷிமா ஆகியோரின் புத்தகத்தில் கிடைத்த தகவலில் இருந்து தான்  பேசியதாக அவர் கூறியுள்ளார்.

அவர்கள் புத்தகத்தில் பேசும்போது வெடிக்காத சர்ச்சை, ரஞ்சித் பேசும்போதெல்லாம் ஏன் வெடிக்கின்றது என்பது ரஞ்சித்துக்கும் கடவுளுக்கும் தான் வெளிச்சம்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of