“அப்போது நானும் இப்படி தான் இருந்தேன்..”- பா.ரஞ்சித்

380

நறுவி என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இயக்குனர்கள் பா.ரஞ்சித், அதியன் ஆதிரை மற்றும் நடிகர் லிஜீஷ் உட்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், நறுவி படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி என்றும், இந்தப்படத்தின் இயக்குனர் போல தான் தானும் அட்டக்கத்தி விழாவில் பதற்றமாக இருந்தேன் என்றும் தெரிவித்தார்.

மேலும், இப்படத்தின் இசை அமைப்பாளர் கிறிஸ்டியை பாராட்டிய பா.ரஞ்சித், இங்கு யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை. அவரவரின் தனித்தனி முயற்சி அவரவர்களுக்கான அடையாளத்தைத் தரும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தகுதியான படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் கை விடுவதே இல்லை. இந்த படம் பெரிதாக வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of