ஒரே நாடு, ஒரே மதம் என்பதை எக்காலத்திலும் ஏற்றுகொள்ள முடியாது – ப.சிதம்பரம்

408

ஒரே நாடு, ஒரே மதம் என்பதை எக்காலத்திலும் ஏற்றுகொள்ள முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தனியார் நிதி உதவி பெறும் பள்ளிகளில் கட்டிடங்கள், நூலகங்கள் ஆகியவற்றை ப.சிதம்பரம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு, இங்கு அனைவரும் சகிப்புத்தன்மையோடு, நல்லுறவோடு வாழ்ந்தால் தான், இந்தியா வளமான நாடாக மாறும் என்றார்.

இந்தியாவில் ஒரே நாடு, என்பதை ஏற்றுக்கொள்வோம், ஆனால், ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்பதை எக்காலத்திலும் ஏற்றுகொள்ள முடியாது என ப.சிதம்பரம் திட்டவட்டமாக தெரிவித்தார்.