அரசு பேருந்து சேதம்! பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கைது!!

329

கடந்த 13ம் தேதி சென்னை அண்ணா சதுகத்தில் இருந்து பயணிகளுடன் அரசு மாநகர பேருந்து பட்டாபிராம் நோக்கி புறப்பட்டது.

பேருந்து அம்பத்தூர், பாடியை கடந்து சிடிஎச் சாலையில் சென்று கொண்டு இருந்தபோது மண்ணூர் பேட்டையில் 5-க்கும் மேற்பட்ட கும்பல் பேருந்தை வழி மறித்துள்ளனர்.

ஆனால் ஓட்டுனர் பேருந்தை நிருத்தாமல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கையில் வைத்திருந்த ஒரு பட்டாகத்தியை பேருந்தின் கண்ணாடி வழியாக வீசியுள்ளனர். இதில் அதிஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த 5 பேரை தேடி வந்த நிலையில், சிசிடிவி கேமராக்களின் உதவியுடன், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேரை கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாகி உள்ள 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.