“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்

1077

சீன “Paddle Fish” ஏறத்தாழ 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இந்த பூமி பந்தில் பல பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள ஒரு அதிசய மீன் இனம். 23 அடி வரை வளரக்கூடிய இந்த மீன், பூமியில் வாழ்ந்த மிக பெரிய இனமான டைனோசர்களை கொன்ற மிக பெரும் பேரழிவால் கூட முழுமையாக அழிக்க முடியயாத இனமாக வளர்ந்து வந்தது. இன்றைய நவீன சீன நகரின் ‘YANGTZRE’ நதிக்கரையில் செழிப்பாக வாழ்ந்து வந்த இந்த மீன் கூட்டம், தற்போது முற்றிலும் அழிந்துவிட்ட இனமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Image-for-paddle

சேறு நிரம்பிய ‘YANGTZRE’ நதிக்கரையில் நீண்ட கத்திபோன்ற மூக்குடன் கம்பிரமாய் தன் உணவை வேட்டையாடி உண்டு வாழ்ந்து வந்த ஒரு இனம் இந்த paddle மீன்கள். ஆனால் கடந்த நூற்றாண்டில் அளவுக்கு அதிகபடியான மீன்பிடித்தலால் இந்த இனம் முழுமையான அழிவிற்கு தள்ளப்பட்டது. 1970களில் வருடத்திற்கு 25 டன் அளவிற்கு இந்த மீன் வேட்டையாடப்பட்டிருக்கிறது. இது இந்த இனத்தின் பெரும் அழிவிற்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இயற்கை என்பது பூமியில் வாழும் அணைத்து உயிர்நினங்களுக்கும் தேவையான அனைத்தையும் வழங்கும் வேளையில் மனிதன் தன் சுயநலத்திற்ககாக பல இனங்களை முற்றிலும் அழித்து, அதனை அழிந்துவிட்ட இனம் என்ற நிலைக்கு மாற்றுவது வேதனைக்குரியதே என்பது உயிரியல் ஆர்வலர்களின் கருத்து.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of