நெல்களை அரசு கொள்முதல் செய்யாததால், மழையில் நனைந்து வீணாகிறது

528

தஞ்சையில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை அரசு கொள்முதல் செய்யாததால், மழையில் நனைந்து வீணாகி வருகிறது. ஒரிரு நாட்களில் கொள்முதல் செய்யாவிட்டால், நெல்களை அனைத்தும் முளைத்துவிடும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் 7 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாத போதிலும் ஆழ்துளை கிணறுகளை நம்பி, விவசாயிகள் குறைந்த பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர்.

தற்போது குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் பல இடங்களில் இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை, பல இடங்களில் கொள்முதல் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் தஞ்சை அருகே உள்ள வரகூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு, விவசாயிகள் கொண்டு வந்த நெல்கள் கொள்முதல் செய்யப்படாமல் சாலையோரங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

தற்போது அங்கு மழை பெய்து வருவதால் சாலைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்கள் அனைத்தும் மழையில் நனைந்து நாசமாகி வருகிறது. நீரின்றி கஷ்டப்பட்டு பயிரிடப்பட்ட பயிர்கள் தற்போது மழை நீரில் நனைந்து வருவது விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

நெல்களை ஒரிரு நாட்களில் கொள்முதல் செய்யாவிட்டால், நெல்கள் அனைத்தும் முளைத்துவிடும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of