நெல் கொள்முதல் நிலையங்கள் வரும் 30 ஆம் தேதி வரை திறந்திருக்கும்

653

தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் வரும் 30 ஆம் தேதி வரை திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் காரீஃப் பருவத்திற்கான நெல் கொள்முதல் நிலையங்கள் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை மட்டுமே செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், செப்டம்பர் மாதத்திலும் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பிரதமர் மோடி மற்றும் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திருக்கும் தேதியை வரும் 30 ஆம் தேதிவரை நீட்டித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளதாகவும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement