பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு

161

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல தங்கள் நாட்டு வான்வழியை பயன்படுத்த அனுமதிக்கப் போவது இல்லை என பாகிஸ்தான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததைத் தொடர்ந்தது. இதனால் மத்திய அரசுடன் மல்லுக்கட்டி நிற்கிறது பாகிஸ்தான்.

எல்லையில் பயங்கரவாதிகளை தொடர்ந்து ஊடுருவ செய்து வருகிறது. இதனிடையே பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிகளையும் இந்தியாவுடன் இணைப்போம் என மத்திய அரசு கூறி வருகிறது.

இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

இதற்காக பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்பரப்பில் பறக்க அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் பாகிஸ்தான் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி இல்லை என மறுத்துவிட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of