மீண்டும் அத்துமீறி தாக்குதல் – எல்லையில் பதற்றம்

392

காஷ்மீர் எல்லையில் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதத்தில் பாகிஸ்தான் தொடர் அத்துமீறலில் ஈடுபட்டதால், எல்லையில் பதற்றம் நிலவி வந்தது.

இந்த மாதத்தில் எல்லையில் அமைதி காணப்பட்ட நிலையில், பாகிஸ்தான் ராணுவம் நேற்று மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டது. ரஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியான நவ்ஷேரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது.