ஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்.. – 150 பயணிகளின் உயிரை காத்த பாகிஸ்தான் விமானப்படை வீரர்கள்..!

7346

நடுவானில் மின்னல் தாக்கி தடுமாறிய இந்திய விமாத்தை பாகிஸ்தான் விமானப்படை வீரர்கள் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஜெய்பூரில் இருந்து ஓமன் தலைநகர் மஸ்கர் சென்ற இந்திய விமானம் ஒன்று, பாகிஸ்தான் எல்லையையொட்டிய சிந்து பகுதியில் பறந்துகொண்டிருந்த போது, மோசமான வானிலையில் சிக்கியது.

இந்த வானிலையில் தடுமாறி கொண்டிருந்த வேளையில் திடீரென மின்னல் தாக்கியதில் கட்டுப்பாட்டை இழந்து 36 ஆயிரம் அடி உயரத்திலிருந்து 34 ஆயிரம் அடி உயரத்திற்கு கீழே இறங்கி விழத் தொடங்கியது. இதனையடுத்து விமானி அபாய ஒலியை எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பாகிஸ்தான் வான் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள், பாகிஸ்தான் எல்லையை பயன்படுத்திக்கொள்ளலாம் என உடனடி அனுமதி கொடுத்தனர்.


இதனையடுத்து நடுவானில் அபாய எல்லையில் இருந்த விமானத்தை விமானி பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் புகுந்து மீண்டும் பாதுகாப்பான வானிலையில் பறக்கத் தொடங்கியது. பாகிஸ்தானின் இந்த உடனடி உதவியால் 150 இந்திய விமானிகள் உயிர் பிழைத்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததையடுத்து பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்திய விமானங்கள் ஆபத்தான வான் பகுதியில் பறந்து வருகின்றன.

ஆனால் 150 பயணிகளின் உயிரை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் விமானப்படை அதிகாரிகள் அனுமதி கொடுத்த சம்பவம் இந்தியா – பாகிஸ்தான் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of