பாக்., (பொய்) குண்டு? இந்திய நீர்முழ்கி கப்பலை விரட்டியதாக பாக்.,அறிவிப்பு

155

பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் இந்தியாவின் அதிநவீன நீர்மூழ்கி கப்பல் நேற்று அத்துமீறி நுழைய முயன்றதாகவும், ஆனால், பாகிஸ்தான் கடற்படையினர் தங்களது திறமைகளை பயன்படுத்தி அந்த அத்துமீறல் முயற்சியை முறியடித்ததாக அந்நாட்டின் கடற்படை செய்தி தொடர்பாளர் இன்று பேட்டியளித்துள்ளார்.

அமைதியை விரும்பும் பாகிஸ்தான் அரசின் நல்லெண்ணத்தை பிரிதிபலிக்கும் வகையில் தான் இந்திய நீர்மூழ்கி கப்பலை நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் இந்திய அரசு பாகிஸ்தான் இதுபோல் தொடர்ந்து பல பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது சகஜம் தான் என நமது கடற்படையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.