இந்திய அணி வெல்ல வேண்டும்! பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா விருப்பம்!

559

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் பரபரப்பான போட்டி நாளை மான்ஸ்செஸ்டர் மைதானத்தில் நடக்கிறது.

இந்தியா பாகிஸ்தான் மோதும் இந்த போட்டிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதால், டிக்கெட் விற்பனை அதிவிரைவில் முடிந்து விட்டது.

இந்நிலையில், உலகக் கோப்பை போட்டியில் நாளை இந்தியா அணி வெற்றிபெற வேண்டும் என பாகிஸ்தான் கேப்டன் சர்பிரஸ் அகமதுவின் தாய்மாமா விருப்பம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கேப்டன் சர்பிரஸ் அகமதுவின் தாய்மாமாவான மஹ்மூத் ஹஸன் என்பவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் எட்டவா நகரில் வாழ்ந்து வருகிறார்.

நாளைய போட்டி எப்படி அமையும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு இன்று பதிலளித்த அவர், நாளை இந்தியா வெற்றிபெற வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

அதேவேளையில், என்னுடைய மருமகன் சர்பிரஸ் அகமதுவும் நன்றாக விளையாடி பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நீடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement