90 பேருக்கு எச்ஐவி ஊசி போட்ட மருத்துவர்! கொடூரனை கைது செய்த போலீசார்!

1048

பாகிஸ்தானின் லர்கானா மாவட்டத்தை சேர்ந்த மருத்துவரான முசாஃபர் கங்காரோ என்பவர், ராட்டோரேடோ பகுதியில் தனியார் மருத்துவமனை நடத்தி வந்துள்ளார்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர், தனது நோயாளிகளுக்கும் ஹெச்ஐவி கிருமி தொற்றுள்ள ஊசியை செலுத்தியுள்ளார்.

இதனால் சுமார் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுள் 65 பேர் குழந்தைகள் என்பது அதிர வைக்கும் செய்தியாகும்.

இந்நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், பாகிஸ்தான் காவல் துறையினர், அவரை கைது செய்துள்ளனர்.