462 இந்தியர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்

384

லாகூரில் நடைபெற உள்ள மறைந்த மகாராஜா ரஞ்சித் சிங்கின் நினைவு அஞ்சலியில் பங்கேற்பதற்காக 462 இந்திய சீக்கிய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்கியுள்ளது.

19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங். பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் உள்ள குருத்வாரா தேரா சாகிப் ஆலயத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடக்க உள்ளது.

இந்த நினைவு அஞ்சலியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள் பாகிஸ்தான் செல்கின்றனர். இதையொட்டி, சீக்கிய யாத்ரீகர்கள் 462 பேருக்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் விசா வழங்கியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of