இந்திய ராணுவ வீரர் கொடூர கொலை – கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

917

இந்திய ராணுவ வீரரை சித்திரவதை செய்து கொன்ற பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றதில் இருந்து காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறைந்துள்ளன.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரரை பாகிஸ்தான் ராணுவம் சித்திரவதை செய்து, அவரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்றது.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த கொடூர செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement