பாகிஸ்தான்- கூகுள் தேடலில் அதிகமாக இடம் பெற்ற இந்தியர்கள்

679

பாகிஸ்தான் எப்.16 விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படையின் லிங் கமாண்டரான தமிழக வீரர் அபிநந்தன் மற்றும் பாலிவுட் நடிகை சாரா அலி கான் ஆகியோர் பாகிஸ்தானில் அதிகமாக கூகுளில் தேடப்பட்ட இரண்டு இந்தியர்கள்.

பாகிஸ்தானில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நபர்கள் குறித்த விவரம் வெளியானது. இதில் அபிநந்தன் அதிகமாக தேடப்பட்டவர்களின் வரிசையில் 9-வது இடம் பெற்றுள்ளார்.அதற்கு அடுத்ததாக பெண்கள் வரிசையில் பாலிவுட் நடிகை சாரா அலி கான் மிகவும் தேடப்படும் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். இந்தியாவில் குடியேறிய பாகிஸ்தான் பாடகர் அட்னான் சாமியும் அதிகம் தேடப்படும் நபர்களில் இடம்பெற்றுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of