அபிநந்தனை அசிங்கப்படுத்திய பாகிஸ்தான்..! வைரலாகும் பகீர் புகைப்படம்..!

575

கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது மூலம் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தான், இந்தியாவின் வான்வெளி பகுதியில் தனது அட்டூழியத்தை தொடர்ந்தது.

இவர்களின் இந்த தாக்குதலை தடுக்க இந்திய விமான படை சேர்ந்தவர்கள் மும்மரமாக ஈடுபட்டனர். அப்போது, இந்திய விமான படையை சேர்ந்த அபிநந்தன் என்பவரின் விமானம் பாகிஸ்தான் விமான படையால் சுட்டுத்தள்ளப்பட்டது.இதையடுத்து பேரா சூட் மூலம் விமானத்தில் இருந்து தப்பித்த அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, அபிநந்தன் அட்டாரி-வாகா எல்லையில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தை கோலி கிண்டல் செய்யும் விதமாக, பாகிஸ்தான் விமானப்படை மியூசியத்தில் அபிநந்தன் பாகிஸ்தான் படை வீரர்களிடம் சிக்கியிருப்தை போன்று சிலையை உருவாக்கியுள்ளனர்.

இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of