சர்வதேச நாடுகளே எங்களுக்கு உதவி செய்யுங்கள்! பாக்., மேஜர் ஜெனரல்!

413

பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் ஆசிப் காபூர் சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், காஷ்மீரில் நிலைத்தன்மையை அழிக்கும் வகையில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்து பேசியுள்ளார்.

அப்போது, நடவடிக்கை எடுப்போம். பிற நாடுகளுக்கு எதிராக எங்கள் நாட்டில் செயல்படும் யார் மீதும் நடவடிக்கை எடுப்போம். பயங்கரவாத செயல்பாடு பாகிஸ்தானின் நலனில் இல்லை என்று நாங்கள் உணர்கிறோம்.

குற்றம் சாட்டுவதற்கு பதிலாக சர்வதேச நாடுகள் இதுபோன்ற இயக்கங்களுக்கு எதிராக போரிட எங்களுக்கு உதவவேண்டும் என்றார்.

‘ஜெய்ஷ்-இ-முகமது பாகிஸ்தானில் ஜஅதிகாரப்பூர்வமாகஸ செயல்படவில்லை,’ என வலியுறுத்தியுள்ள காபூர், ‘இவ்வமைப்பு பாகிஸ்தானாலும், ஐக்கிய நாடுகள் சபையாலும் தடை செய்யப்பட்டுள்ளது.’ என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of