புதுமனைவிக்கு பிரம்மாண்ட பரிசு.. கலக்கிய கணவன்.. இணையத்தில் வைரல்..

3712

மனிதன் பூமியில் உள்ள அனைத்து பொருட்களையும் தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடி வருகிறான். வேறு யாருக்கும் தர மாட்டேன் என்றும் அடம்பிடித்து வருகிறான்.

தற்போது, ஒரு படி மேலே போய், நிலவையும் கூறு போட்டு விற்பனை செய்து வருகிறான். அதாவது, அமெரிக்காவில், நிலவு நிலங்களை விற்பனை செய்வதற்கான பதிவாளர் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தின் மூலம், நிலவில் உள்ள நிலங்களை வாங்க முடியும். இதுவரை, ஷாருக்கான், சுஷாந்த் சிங், டாம் குரூஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நிலாவில் நிலத்தை வாங்கியுள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த சோஹப் அகமது என்பவர், தனது புதமனைவிக்கு நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி பரிசாக அளித்துள்ளார். மனைவிக்கு திருமணப் பரிசாக நிலவில் நிலம் வாங்கிக்கொடுத்த தகவல், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.