சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் நவாஸ் ஷெரீப் | Nawaz Sharif

154

பாகிஸ்தான் பிரதமராக மூன்று முறை பதவி வகித்தவர் தான் நவாஸ் ஷெரீப். பனாமா கேட் ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்த அவருக்கு உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, லாகூரில் உள்ள மருத்துவமனையில் நவாஸ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், லாகூர் மருத்துவமனை டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சைக்குப் பின்னர், தற்போது நவாஸ் ஷெரீப் வீடு திரும்பியுள்ளார் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.