நீங்கள் எடுக்கவில்லை அதனால் தான் நாங்கள் எடுத்தோம்.., நிர்மலா சீதாராமன்

263

பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு ஓய்வூதிய திட்ட அடையாள அட்டையை 10 தொழிலாளர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், நிலோபர் கபில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில்,

பலமுறை வலியுறுத்தியும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததாலேயே தீவிரவாத முகாமை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அபிநந்தன் மீண்டும் போர் விமானம் இயக்குவாரா என்பது குறித்து மருத்துவர்களும், விமானப்படை அதிகாரிகளும் முடிவெடுப்பார்கள் . தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததால் இந்தியா நடவடிக்கை எடுக்கிறது.

தீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அழிக்கப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை தொடர்பாக வெளியுறவு செயலர் கூறியதுதான் அரசின் கருத்து.

விமானப்படை தாக்குதலுக்கு சேட்டிலைட் படம் ஆதாரம் உள்ளதா என்பதை கூற இயலாது என்று கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of